×

உங்கள் பணியை சரியாக செய்யவில்லை என்றால் பணி நீக்கம் செய்யப்படுவீர்கள் : காற்று மாசு வழக்கில் பஞ்சாப் தலைமைச் செயலாளருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை

புதுடெல்லி:  உங்களால் காற்று மாசை கட்டுப்படுத்த முடியாவிடில் எதற்கு அரசாங்கத்தை நடத்துகிறீர்கள்? என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. வேலைகளை சரியாக செய்யவில்லையெனில் பணிநீக்கம் செய்யப்படுவீர்கள் என பஞ்சாப் தலைமைச்செயலாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி


டெல்லியில் காற்று மாசு மிக மோசமாக அதிகரித்துள்ளது. பஞ்சாப், அரியானா, மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் வயல்களில் அறுவடைக்குப்பின் காய்ந்து கிடக்கும் வைக்கோல்கள் எரிக்கப்படுகின்றன. இதனால் காற்றில் புகை அதிகளவில் கலந்து டெல்லியில் காற்று மாசுவை ஏற்படுத்திவிட்டது. காற்று மாசுவின் அளவு அதிகரித்ததால், டெல்லியில் பள்ளிகளுக்கு ஒரு வார காலம் விடுமுறை விடப்பட்டது. மக்கள் முக மூடியுடன் வெளியே செல்கின்றனர்.  இந்த விவகாரத்தை அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. இதன் மீதான விசாரணை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது, காற்று மாசால் மக்கள் தங்களின் மதிப்புமிக்க வாழ்நாளை இழக்கின்றனர் என அரசு அதிகாரிகளிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். இதையடுத்து பயிர்க்கழிவுகள் எரிப்பைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 6ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச தலைமைச் செயலாளருக்கு சம்மன் அனுப்ப நீதிபதிகள் ஆணையிட்டனர்.

 3 தலைமைச் செயலாளர்களும் ஆஜர்


இந்நிலையில், நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு முன் 3 தலைமைச் செயலாளர்களும் ஆஜராகினர்.அப்போது,

உச்சநீதிமன்றம்  : காற்று மாசு விவகாரத்தில் பஞ்சாப் அரசு முழுமையாக தோல்வியடைந்துவிட்டது.

உச்சநீதிமன்றம்  : காற்று மாசை கட்டுப்படுத்த முடியாவிடில் எதற்கு அரசை நடத்துகிறீர்கள் ?

உச்சநீதிமன்றம்  : நிலைமையை சரிய செய்யமுடியாவிட்டால், பஞ்சாப் மாநிலத்தை மத்திய அரசே ஆளட்டுமே

உச்சநீதிமன்றம்  : மக்களின் உயிரைக் காக்க முடியவில்லை என்றால் எதற்காக பஞ்சாப் தலைமைச் செயலாளராக இருக்குறீர்கள் ?   

உச்சநீதிமன்றம் : இந்த விவகாரத்தில் பஞ்சாப் தலைமை செயலாளர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

 பஞ்சாப் தலைமை செயலாளர் : பயிர் எரிப்புக் கழிவுகளை தடுக்க மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.

மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் வாதம்.: பயிர் கழிவுகளை எரிப்பதை உடனடியாக நிறுத்தினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்

 உச்சநீதிமன்றம் : உங்கள் பணியை சரியாக செய்யவில்லை என்றால் பணி நீக்கம் செய்யப்படுவீர்கள். ((பஞ்சாப் தலைமைச் செயலாளருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை))

 உச்சநீதிமன்றம் :  காற்று மாசு விவகாரத்தில் விவசாயிகளை தண்டிப்பது தீர்வாகாது, இவ்வாறு செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்.

 உச்சநீதிமன்றம் : பொதுமக்களிடம் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள், அவர்களுக்கு தேவையான கருவிகளை பெற்றுக் கொடுங்கள்.

உச்சநீதிமன்றம் : 7 நாட்களுக்குள் பஞ்சாப்பில் உள்ள பயிர் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான வேலைகளை செய்யுங்கள், செலவுகளை பற்றி கவலைப்படாதீர்கள் அதையும் நாங்கள் உங்களுக்குப் பெற்றுத் தருகிறோம்.

Tags : Judges ,Punjab ,chief secretary , Supreme Court, Chief Secretary, Warning, Punjab, Air Pollution, Arun Mishra
× RELATED தமிழகத்தில் இதுவரை எத்தனை மதுபான...