×

கே.4 அணு ஆயுத ஏவுகணையை நாளை மறுநாள் பரிசோதனை செய்கிறது இந்தியா

நீருக்கடியில் இருந்து ஏவப்படும் கே.4 அணு ஆயுத ஏவுகணைப் பரிசோதனை வெள்ளிக்கிழமை அன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம், எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் திறனை மேம்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ. (DRDO) உருவாக்கியுள்ள கே.4 என்ற அணு ஆயுத ஏவுகணையை பரிசோதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பரிசோதனை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிஹந்த் அணு ஆயுத கப்பலுக்காகவே உருவாக்கப்பட்ட இந்த கே4 ஏவுகணை 3,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்க வல்லது. ஏவுகணைப் பரிசோதனை தொடர்பாக, வான் மற்றும் கடல் சார் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்கெனவே விடுக்கப்பட்டு விட்டது.


Tags : India , Underwater, Q4 nuclear test, India, tests
× RELATED கப்பலை மிக துல்லியமாக தாக்கி...