×

திறந்த வெளிக்கிணற்றை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றி விவசாயி சாதனை

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே வயலில் திறந்த வெளிக்கிணற்றையே மழைநீர் சேகரிப்புத் தொட்டியாக மாற்றிய விவசாயி. இதனால் நீர் மட்டத்தை 90 சதவீதம் உயர்த்திக்காட்டி சாதனை படைத்துள்ளார். பருவமழை பாரபட்ச மின்றிப்பெய்து, ஆறுகளில் வெள்ளப்பெருக்கே ஏற்பட்டாலும், முறையாக அதனை சேமிக்க வழியில்லாத காரணங்களால், தமிழகத்தில் அடைமழை பெய்த அடுத்தசில வாரங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் தத்தளிக்கும் அவல நிலைதான் ஏற்பட்டு வருகிறது. பாசனத்திற்காகவும், பசியாறப் பருகவும் வேண்டிய நீரின் அவசியத்தை உணர்ந்ததால் தற்போது மழைநீர் சேகரிப்பு என்பது மறுக்க முடியாத திட்டமாகவே மாறிவிட்டது. நகராட்சி ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலர்கள் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரை தற்போது வரிந்து கட்டிக்கொண்டு, வீடுவீ டாக ஆட்களை அனுப்பி மழைநீர் சேகரிப்புத் தொட் டி இல்லாத வீடுகளைக் கண்டறிந்து விரைவில் கட்ட எச்சரித்து வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே வடக்குமாதவி கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்வராஜ் என்பவர் தனது வயலில் பெய்யும் ஒட்டுமொத்த மழைநீரையும் ஒன்றாக கொண்டு வந்து, மழைநீர் சேகரிப்புத்தொட்டியில் வடிகட்டி கிணற்றில் சேகரித்து அதன் மகத்துவத்தை மனதார அனுபவித்து வருகிறார். இதற்காக விவசாயி செல்வராஜ் தனது பாசன கிணற்றின் அருகே பெரியதும் சிறியதுமான 2 தொட்டிகளை கட்டமைத்துள்ளார். அதேபோல் வயல்களில் தேங்கும் மழை நீரை சிறு சிறு வாய்க்கால் வழியாக ஒன்றாக்கி விரயமாகாமல் கிணற்றின்அருகே கொண் டுவர வழியமைத்துள்ளார்.

அனைத்து வயல்களிலும் பெய்கின்ற மழைநீர் வாய் க்கால் வழியாக கிணற்றருகே வந்தபிறகு முதலில் அமைக்கப் பட்டுள்ள சிறு தொட்டியில் மழைநீர் விழு ம்படி செய்துள்ளார். அதில் வயலில் அடித்துவரப்படும் மண், தூசு ஆகியன வடிகட்டப்பட்டு, பின்னர் அந்தத் தண்ணீர் அடுத்துள்ள பெரியத் தொட்டியில் விழச்செய் கிறார். அதில் விழும் மழை நீர் தொட்டியில் ஒவ்வொரு அடுக்காக நிரப்பப் பட்டுள் ள சிறு ஜல்லி, கப்பி, மண ல், பெரும் ஜல்லி ஆகியவ ற்றில் படிப்படியாக வடிகட்ட ப்பட்டு, தெள்ளத் தெளிந்த சுத்தமான நீராகத் தொட்டி யின் கீழ் செல்லும்போது, அவை தொட்டியின் கீழிரு ந்து கிணற்றைநோக்கி பதி க்கப்பட்டுள்ள குழாய் வழி யாகப் பாய்ந்து கிணற்றுக்குள் சென்று நிரப்புகிறது. இந்த தண்ணீர் செல்வராஜின் கிணற்றுக்கு நிரந்தர நீர்மட்டத்தை உயர்த்தித்தரு கிறது. குறிப்பாக சுற்று வட் டார கிணறுகளில் இருக்கு ம் நீர் மட்டத்தைவிட பல மட ங்கு உயர்ந்து பளிங்குபோ ல் காணப் படுகிறது. இத னை நம்பி முப்போக சாகுப டியில் ஈடுபட தன்னம்பிக்கை கிடைத்துள்ளது.

Tags : rain water harvesting , rain water harvesting
× RELATED புளியங்குடியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி