×

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்: ஒடிசா அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும்: இந்திய வானிலை மையம்

டெல்லி: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17ம் தேதி தொடங்கியது. அதன் பிறகு அரபிக்கடல் பகுதியில் 2 புயல்கள் உருவாகின. அதாவது, கடந்த 24ம் தேதி அரபிக்கடலில் நிலைகொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ‘கியார்’ என்ற தீவிர புயலாக மாறியது. இந்நிலையில் கடந்த இருநாட்களுக்கு முன்னர் ஓமனில் கரையை கடந்தது.

அதனை தொடர்ந்து  கடந்த 27ம் தேதி தென்மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரி கடல், தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் இலட்ச தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டது. இது ‘மகா’ என்ற புதிய புயல் சின்னமாக மாறியது. இந்தநிலையில், வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

ஒடிசா அருகே உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும். புல்புல் புயல் உருவாகி வடமேற்கு திசையில் மேற்கு வங்கத்தை நோக்கி நகரும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் அந்தமான் கடற் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.


Tags : Odisha Bengal Sea ,Zone ,Windsor ,Bengal Sea ,Deep Winds , Odisha, Storm, Indian Weather Center
× RELATED சிகரெட் பிடிப்பதை வீட்டில் சொல்வேன்...