×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான சயன் மீதான குண்டர் சட்டம் செல்லாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோடநாடு கொலை வழக்கில் கைதான சயன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு காவலாளி கொலை மற்றும் அங்கு நடைபெற்ற கொள்ளை வழக்குகள், அதுமட்டுமம்லாது வேகமாக கார் ஒட்டி டிப்பர் லாரியில் மோதி மனைவி, குழந்தை ஆகியோர் பலியானது, ஊட்டியை சேர்ந்த ஒருவரை மிரட்டியது, ஆசிரியர் ஒருவருடன் சேர்ந்து முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு பொய்யான தகவல்களை பரப்பியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சயன் மீது வழக்குப்பதிவு  செய்யப்பட்டது. இந்த தொடர் குற்றங்களுக்காக கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி சயனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சயன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் விபத்தில் மனைவியையும், பிள்ளையையும்  பறிகொடுத்த சம்பவத்தை தன்மீதான குற்ற வழக்குடன் தொடர்புபடுத்தியிருப்பதாகவும், மேலும் கோடநாடு கோலை, கொள்ளை விவாகரத்தில் முதலமைச்சர் பழனிசாமியை பிடித்து பேசாமல் தடுப்பதற்காகவே தன்னை குண்டர் சட்டத்தில் கீழ் அடைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் 409 பக்கங்கள் தமிழில் ஆவணங்கள் கொண்ட குண்டர் சட்ட கைது உத்தரவை தமிழ் தெரியாத தமக்கு படித்து கட்டியதாகவும், மலையாளத்தில் ஆவணங்கள் வழங்கப்படவில்லை  என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் தன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் டி.கா.ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சயனுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி நீலகிரி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த குண்டர் தடுப்பு சட்டத்தை  ரத்து செய்வதாக உத்தரவிட்டனர். இதையடுத்து, சயனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவு செல்லாது எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில்  தெரிவித்துள்ளனர்.

Tags : Thiruvananthapuram ,murder ,Kodanad ,Sion ,robbery , Kodanadu, Murder, Robbery, Case, Cyan, Thug Act, Cancellation, High Court
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!