×

வெங்காய விலை உயர்வு: ஆப்கான், எகிப்து, ஈரான் மற்றும் துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம்...!

டெல்லி: ஆப்கான், எகிப்து, ஈரான் மற்றும் துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்துதான் நாடு முழுவதுக்குமான வெங்காயம் அனுப்பப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. இம்மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் வெங்காய பயிர்கள் அழிந்தன.

இதன் காரணமாக இந்தியாவில் வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வெங்காயத்தின் உற்பத்தி பெருமளவு குறைந்த நிலையில், அதன் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் வெங்காயம் வாங்குவதை குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமைச்சர்களுக்கு இடையிலான குழு கூட்டத்தில் வெங்காய தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், வெங்காய தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், ஈரான், துருக்கி மற்றும் எகிப்து போன்ற நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது.

உடனடி தேவைக்காக, முதல்கட்டமாக 80 கண்டெய்னர்களில் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்பிறகு சந்தையில் ஏற்படும் தேவைக்கேற்ப வெங்காயத்தை இறக்குமதி செய்யவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிகரித்த வெங்காயத்தின் விலை மீண்டும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Iran ,government ,Afghanistan ,Egypt ,Turkey , Onion, imports, central government
× RELATED ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த அணு...