×

பள்ளி கேன்டீன்களில் நொறுக்குத் தீனிகளை விற்க தடை : மத்திய அரசு அதிரடி உத்தரவு

டெல்லி : பள்ளி கேன்டீன்களிலும், பள்ளிகளைச் சுற்றி இருக்கும் கடைகளிலும் நொறுக்குத் தீனிகளை விற்க தடை விதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசின் உணவு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான உணவு வழங்குவது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி பள்ளிகளில் உள்ள கேன்டீன்களில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நொறுக்கு தீனிகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு :

*பள்ளிகளைச் சுற்றி 50 மீட்டர் இடைவெளியில் உள்ள கடைகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*பள்ளி கேன்டீன்களில் நொறுக்குத் தீனி மற்றும் அது தொடர்பான விளம்பர பதாகைகள், சுவர் விளம்பரங்கள் எதுவும் இடம்பெறக் கூடாது என்று கூறப்பட்டு உள்ளது.

*மாணவர்கள் எந்த மாதிரியான உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடுகிறார்கள் அவை தரமானவையா என்பதை ஆய்வு செய்ய பள்ளி நிர்வாகம் தனிக்குழுக்களை அமைத்து கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

*தங்களது வளாகத்தில் உள்ள கேன்டீன்களில் என்னென்ன உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பன போன்ற விவரங்களை மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறைக்கு பள்ளி நிர்வாகங்கள் அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.   

கேரளாவில் பள்ளி கேன்டீன்களில் பீட்சா, பர்கருக்கு தடை விதிக்க முடிவு

இதனிடையே கேரளாவில் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த கடந்த சில வருடங்ளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடை மீறப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, அதை கடுமையாக்கும் படி கேரள பொது கல்வி துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளி கேன்டீன்களில் பீட்சா, பர்கர், சிப்ஸ்,கோலா குளிர்பானங்கள், குலாப்ஜாமூன், கார்போனைட் ஜூஸ் ஆகியவற்றை விற்பதற்கும் தடை விதிக்க பட உள்ளது. பள்ளியில் இருந்து 50 மீட்டர் சுற்றளவில் இந்த உணவுகளை விற்கவும் தடை வருகிறது. அடுத்த மாதம் முதல் இந்த தடையை அமல்படுத்த தீர்மானித்துள்ளதாக உணவு பாதுகாப்பு துறை கூறப்படுகிறது.

Tags : Kerala, school, canteen, crumbling food, central government, ban
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...