×

திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் விடிய விடிய சோதனை: இதுவரை 30 கிலோ தங்கம் பறிமுதல் என தகவல்

திருச்சி: துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்திருந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த வியாபாரிகளிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று இரவு முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையம் வளாகத்தில் உட்பகுதியில் வைத்து சுமார் 150 பேரிடம் இந்த சோதனையாது நடைபெற்று வருகிறது. துணை இயக்குனர் கார்த்திக்கேயன் தலைமையில் இந்த விசாரணையாது நடைபெற்று வருகிறது.

இதற்காக 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மதுரை, சேலம், பகுதிகளில் இருந்து வந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையாது திருச்சி விமான நிலையத்தில் அடிக்கடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் அதிகரித்து வந்தது. கடந்த ஆண்டு இது தொடர்பாக பெரிய விசாரணையானது நடத்தப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும்  அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 150 பயணிகளிடம் நடத்திய சோதனையில் பலரிடம் தங்கம் இருந்தது தெரிய வந்தது.

அவர்களிடம் இருந்து இதுவரை 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயணிகளிடம் தங்கம் இருப்பதை தொடர்ந்து தங்கம் எதற்காக எடுத்து சென்றிர்கள் என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Trichy airport ,Trichy , Trichy Airport, search
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...