×

பவானிசாகர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு: அணையின் நீர்மட்டம் - 104.64 அடியாக உள்ளது

ஈரோடு: மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் மழையை தொடர்ந்து பவானிசாகர் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் பவானிசாகர் அணையில், நீர்வரத்து வினாடிக்கு 3028 கனஅடியில் இருந்து 3965 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தற்போது அணையின் நீர்மட்டம் - 104.64 அடியாக உள்ளது. நீர்இருப்பு - 32.4 டிஎம்சி-ஆக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கா 2900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் அணையானது விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Bhawanisagar Dam , The Bhawanisagar Dam, aqueduct
× RELATED கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்