×

பெரும்பாக்கம் டாஸ்மாக் அருகே நடந்த இரட்டை கொலையில் 3 பேர் கைது: நீண்ட நாட்களுக்கு பிறகு துப்பு துலங்கியது

வேளச்சேரி: பெரும்பாக்கம் ஆனந்தா நகர் டாஸ்மாக் அருகே நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக 3 பேர் போலீசில் சிக்கினர். வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம், இந்திரா நகரை சேர்ந்தவர் ஆனந்த் (23). லாரி கிளீனர். இவரது உறவினர் ஸ்டீபன் (23); ஆட்டோ டிரைவர். இவர்கள் இருவரும் கடந்த மாதம் 14ம் தேதி இரவு 11 மணி அளவில் அதே பகுதியில் உள்ள ஆனந்தா நகர் டாஸ்மாக் கடை அருகே ஆட்டோவில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது 3 பைக்குகளில் வந்த மர்ம கும்பல் ஆனந்த், ஸ்டீபன் ஆகிய இருவரையும் பட்டாக்கத்திகளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் ஸ்டீபன் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆனந்த் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். இதை பார்த்தமக்கள் பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து ஆனந்த்தை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ஆனந்த் இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஸ்டீபன், ஆனந்த் ஆகியோர் மது அருந்தியபோது பைக்கில் ஆட்டோவில் உரசியது தொடர்பாக தகராறு ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடினர். ஆனால், கொலையாளிகளை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. உடனடியாக துப்பு கிடைக்காததால் போலீசார் திணறி வந்தனர். நீண்ட விசாரணைக்கு பிறகு சிந்தாதிரிப்பேட்டையில் கடந்த மாதம் 10ம் தேதி பெண் வக்கீல் மற்றும் மகனை கொலை செய்வதற்காக குண்டு வீசிய வழக்கில் தொடர்புடைய வேலு, நாகை ராகவன், திருவல்லிக்கேணி பொன்னப்பன் தெருவை சேர்ந்த ரமேஷ் (36) ஆகியோர்தான் என்பது தெரிய வந்தது.

இவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இவர்களில் வேலு, நாகை ராகவன் ஆகியோர் வக்கீல் மீது குண்டு வீசிய வழக்கில் நீதிமன்றத்தில் ஏற்கெனவே சரண் அடைந்து இருந்ததால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று ரமேஷை போலீசார் கைது செய்தனர். சிறையில் உள்ளவர்களை இந்த வழக்கில் மீண்டும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பிடிபட்ட ரமேஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அன்றைய தினம் தமிழகம் முழுவதும் 8 கொலைகள் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : arrests ,Tasmaq Task force ,arrest , The majority of the task force, double murder, arrested 3 people
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் உணவக...