×

மோடிக்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் பாடகி விரக்தி: பொழுதுபோக்கு துறையில் இருந்து விலகல்

இஸ்லாமாபாத்:  தனது அந்தரங்க படங்கள் ஆன்லைனில் கசிந்ததை அடுத்து பொழுதுபோக்கு துறையில் இருந்து விலகுவதாக பாகிஸ்தானின் பிரபல பாடகி ரபி பிர்சாடா அறிவித்துள்ளார்.  பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகி ரபி பிர்சாடா. இவர் இந்திய பிரதமர் மோடிக்கு புகைப்படம் மூலம் மிரட்டல் விடுத்ததன் காரணமாக சமூக வலைதளங்களில் பிரபலமானவர். முதலில் வி ஷபாம்புகளை வைத்து  மோடியை கொல்லப்போவதாக கூறிய ரபி பிர்சாடா, கொடிய பாம்புகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். பின்னர், இரண்டாவது முறையாக பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்த ரபி,  உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுத்திருந்தார். மேலும் மோடி ஒரு ஹிட்லர், காஷ்மீரின் மகளாக ஆக விரும்புகிறேன் என்ற வாசகத்தையும் படத்துடன் அவர் பதிவிட்டு இருந்தார்.

 பிர்சாடாவின் இந்த பதிவை பார்த்த பலர் அவரை விமர்சித்திருந்தனர். சிலர் அவரை முட்டாள் என்றும், சிலர் அதிவிரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்றும் விமர்சித்து இருந்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக லாகூர் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகிய தனது புகைப்படம் தொடர்பாக அவர் மத்திய புலனாய்வு அமைப்பில் புகார் அளித்துள்ளார். அதில் தனது தனிப்பட்ட ரகசியங்கள் திருடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது தனிப்பட்ட படங்கள் ஆன்லைனில் கசிந்ததை அடுத்து பொழுதுபோக்கு துறையில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளதாகவும் பாடகி ரபி பிர்சாடா நேற்று அறிவித்தார். ‘பொழுதுபோக்கு துறையில் இருந்து வெளியேறுகிறேன். என் பாவங்களை இறைவன் மன்னிப்பான். எனக்கு ஆதரவாக மக்களின் இதயங்களை பெற முயற்சிப்பேன்,’ என்று அவர் கூறியுள்ளார்.Tags : singer ,Pakistani ,resignation ,Modi , Modi intimidates, Pakistani singer, entertainment industry
× RELATED ஆற்றழகிய சிங்கர்