×

மிசோரம் புதிய கவர்னராக எஸ்.எஸ். பிள்ளை பதவியேற்பு

அய்சால்: மிசோரம் மாநிலத்தின் புதிய கவர்னராக எஸ். ஸ்ரீதரன் பிள்ளை நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய் லம்பா, ராஜ்பவனில் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த விழாவில் மாநில முதல்வர் சோரம் தாங்கம், அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், முன்னாள் முதல்வர் லால் தன்வாலா மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக, தரன் பிள்ளை கேரள மாநில பாஜ தலைவராக இருந்தார். பதவியேற்றுக் கொண்ட பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், ``ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தருவேன்,’’ என்றார்.Tags : governor ,Mizoram ,swearing , Mizoram, Governor of SS. Pillai
× RELATED வடகிழக்கு மாநிலமான மிசோரத்தின்...