சில்லி பாயின்ட்...

* ஒருநாள் போட்டிகளை மேலும் சுவாரசியமாக்கும் வகையில் தலா 25 ஓவர்கள் கொண்ட 4 இன்னிங்சாக பிரிக்க வேண்டும் என்று சச்சின் ஆலோசனை கூறியுள்ளார்.
* ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் டிசம்பர் 19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் லெவன் 6 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.
* இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர், பாகிஸ்தானில் இருந்து மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால், காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற கட்லு ரவிக்குமாருக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
* தேசிய ஜூனியர் தடகள போட்டியின் மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா (13.700 விநாடி) புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.


Tags : innings ,Sachin , 4 innings, Sachin
× RELATED சில்லி பாயின்ட்...