×

10 ரன்னில் 5 விக்கெட் இங்கிலாந்து பரிதாபம்

நெல்சன்: நியூசிலாந்து அணியுடனான 3வது டி20 போட்டியில், சேசிங்கின்போது 10 ரன்னுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்த இங்கிலாந்து பரிதாபமாகத் தோற்றது. சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்தது. கப்தில் 33, கிராண்ட்ஹோம் 55 ரன் (35 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), டெய்லர் 27, நீஷம் 20, சான்ட்னர் 15 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் டாம் கரன் 2, சாம் கரன், சாகிப், பிரவுன், பார்கின்சன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 14.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்து வெற்றிப் பாதையில் பயணித்தது. எஞ்சியுள்ள 31 பந்தில் 42 ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், மேற்கொண்டு 10 ரன்னுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியது. ‘

அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து பரிதாபமாக வீழ்ந்தது. டாம் பான்டன் 18, மாலன் 55, வின்ஸ் 49, கேப்டன் மோர்கன் 18 ரன் எடுத்தனர். டாம் கரன் 14, சாகிப் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் பெர்குசன், டிக்னர் தலா 2, சோதி, சான்ட்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கிராண்ட்ஹோம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். நியூசி. 2-1 என முன்னிலை வகிக்க, 4வது போட்டி நேப்பியரில் நாளை நடக்கிறது.

Tags : England , New Zealand Team, England
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...