×

3 ஆண்டு இல்லாத அளவு தங்கம் வாங்குவது சரிவு

மும்பை: தங்கத்தின் தேவை இந்த ஆண்டில் முந்தைய ஆண்டைவிட 8 சதவீதம் குறைந்துவிட்டது. அதாவது 700 டன்களாக குறைந்துள்ளது. இது, கடந்த 2016ம் ஆண்டில் இருந்து கடந்த மூன்று ஆண்டில் மிகவும் குறைவானதாகும். உலக தங்க கவுன்சிலின் மேலாண்மை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.  கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் தங்கத்தின் நுகர்வு ஓராண்டுக்கு முன்பு இருந்ததைவிட மூன்றில் ஒரு பங்காக, அதாவது 123.9 டன்களாக குறைந்துவிட்டது. உலகளவில் தங்கம் அதிகம் வாங்கும் நாடுகளில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா தான் உள்ளது.

 தங்கம் விலை உயர்ந்ததால், கிராமங்களில் தங்க நகைகள் வாங்குவது குறைந்து விட்டது. சில பகுதிகளில் அதிக மழையால் விவசாய வருமானம் குறைந்து விட்டது. நகை வாங்குவதில் மூன்றில் 2 பங்கு கிராம மக்கள்தான். அவர்களிடம் வாங்கும் சக்தி குறைந்ததால் தங்கத்தின் தேவையும் குறைந்துவிட்டது. தங்கம் இறக்குமதி குறைந்ததால் பழைய தங்கம் விற்பனை கடந்த 9 மாதங்களில் 90.5 டன்களாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது 87 டன்களாக இருந்தது. என சோமசுந்தரம் தெரிவித்தார்.


Tags : gold ,purchases decline
× RELATED ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; இன்று...