ஸ்டான்லி விடுதி திடீர் மூடல் முதல்வர் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகை

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி உள்ளது. இங்கு  சென்னை மற்றும் வெளியூர்களிலிருந்து மாணவ மாணவியர்கள் படிக்க வருகின்றனர். அவர்கள் தங்குவதற்கு தங்கும் விடுதி உள்ளது இந்நிலையில் திடீரென்று நேற்று மாணவிகள் தங்கியிருந்த அந்த விடுதியை பூட்டி விட்டனர். இதுபற்றி அறிந்த மாணவ, மாணவிகள் மருத்துவமனை முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, விடுதியை திறக்க வலியுறுத்தினர். ஆனால் இதனை மருத்துவமனை நிர்வாகம் ஏற்கவில்லை. அவர்கள் பொருட்களை அறை உள்ளே வைத்து பூட்டி விட்டனர்.

இதனால், எங்கு போவது என்று தெரியாமல் இந்த மாணவிகள் தவித்தனர். இதுகுறித்து மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது, மாணவ, மாணவிகள் தங்கி இருக்கும் கட்டிடம் பழமையானதாகும். தற்போது மழை வரும் காரணத்தால் ஏதேனும் விபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் மாணவிகளை வெளியேற்றுவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது. அப்படி வெளியேறினாலும் மாணவிகள் தங்குவதற்கு மாற்று இடம் மருத்துவமனை நிர்வாகம் வழங்கி இருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இதுபோல் படிக்கும் மாணவிகளை தவிக்க விடுவது ஞாயமா என்று மாணவிகள் கேள்வி எழுப்பினர்.

Related Stories:

>