பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணி காரமணாக சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதி ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதன்படி 9ம் தேதி சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இரவு 11, 11.20, 11.40, 11. 59 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதேப்போல், மறு மார்க்கத்தில் இரவு 10.25, 10.25, 11.25, 11.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு - கடற்கரை இடையே 10.15, 11.10 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. 10ம் தேதி தாம்பரம் - சென்னை இடையே காலை  3.55, 4.15, 4.35 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. கடற்கரை - தாம்பரம் இடையே காலை 4.15 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>