×

மாமல்லபுரத்தில் குடிநீர் வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி: கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்

சென்னை : மாமல்லபுரத்தில் முறையான குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைகின்றனர். உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான மாமல்லபுரத்துக்கு தினமும் உள்ளூர், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து பல்லவர் கால வெண்ணய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்டவற்றை கண்டு ரசிக்கின்றனர்.ஆனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முறையான குடிநீர்
வசதி ஏற்படுத்தவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் அவதியடைகின்றனர். அவர்களின் தண்ணீர் தேவைக்கு, பஸ் நிலையம் அருகே வந்து, கடைகளில் பாட்டில் தண்ணீரை வாங்க வேண்டிய நிலை உள்ளது.இதனால், இந்த
பகுதியில் அரசு சார்பில் விற்பனை செய்யப்படும் அம்மா குடிநீர் கடைகள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பிரதமர்  மோடி  மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் கடந்த மாதம் மாமல்லபுரம் வந்து சென்றனர். அவர்கள் சென்ற பிறகு இங்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.ஆனால் அடிப்படை தேவையான குடிநீர் வசதி முறையாக ஏற்படுத்தவில்லை. இதனால் தினமும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதுபற்றி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தொல்லியல் துறையிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், அதிகாரிகள் மெத்தன போக்காக உள்ளனர்.எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உடனடியாக மாமல்லபுரத்தில் தேவையான இடங்களில் குழாய் மற்றும் சின்டெக்ஸ் டேங்க் அமைக்க வேண்டும். சில இடங்களில் அரசின் அம்மா குடிநீர் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Mamallapuram , Mamallapuram, Drinking Water, Tourists, Beer administration
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...