×

திமுக கூட்டணியில் உள்ளாட்சி தேர்தலில் மதிமுக பங்கேற்கும்: வைகோ பேட்டி

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னை விமான நிலையத்தில் நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமேயானால் திமுக தலைமையிலான கூட்டணியில்  மதிமுக  பங்கேற்கும். உள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெற மதிமுக வேட்பாளர்களை  ஆதரித்து பிரசாரம் செய்வோம்.

சென்னையில்  மாசு அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. திருவள்ளுவர் சிலைக்கு காவிஉடை அணிந்தது, திருவள்ளுவர் சிலை அவமதிப்பு  போன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துள்ளதால்  திமுக தலைவர் ஸ்டாலின் சொன்ன கருத்து சரியாகத்தான் இருக்கும் என்று தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Mathimukha ,DMK ,coalition elections ,interview ,Vaiko ,Vigo , DMK alliance, local elections, Vigo
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...