×

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை மேலும் உயர்வு: வெளிமாநிலங்களில் மழை, வரத்து குறைவு

சென்னை: வெளி மாநிலங்களில் மழை மற்றும் காய்கறிகளின் வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழையால் வெங்காயத்தின் விலை கிலோவிற்கு 35 ரூபாய் வரை விற்ற வெங்காயம் இந்த மாத இறுதிக்குள் 100 ரூபாயை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 15 நாட்களுக்கு முன்பு 35க்கு விற்ற வெங்காயம் தற்போது ₹75 ஆக உயர்ந்துள்ளது. தக்காளி  35க்கு விற்கப்பட்டது, தற்போது 40 ஆக உயர்ந்தது. உருளைக்கிழங்கு 18க்கு விற்றது தற்போது 23.

கத்தரிக்காய் 25க்கு விற்றது 35. முட்டைக்கோசு 8, தற்போது 13.  பீன்ஸ்  30க்கு விற்றது 35. கேரட்  50ல் இருந்து 65. முள்ளங்கி 8, தற்போது  15. வெண்டைக்காய் 25ல் இருந்து40. முருங்கைக்காய் 50, தற்போது 80. பீட்ரூட் 20ல் இருந்து 28. பாகற்காய் 30ல் இருந்து 40.  சாம்பார் வெங்காயம் ₹30ல் இருந்து 75. வாழைக்காய் 2ல் இருந்து 6. சௌசௌ8ல் இருந்து 12. இஞ்சி 80ல் இருந்து 160. எலுமிச்சை 30ல் இருந்து50. சேனைக்கிழங்கு 20ல் இருந்து 30. தேங்காய் 16ல் இருந்து 30. கருணைக்கிழங்கு 30ல் இருந்து 35. என காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன.   


Tags : market ,Coimbatore ,regions , Coimbatore Market,vegetables,outer regions
× RELATED கோயம்பேட்டில் கஞ்சாவுடன் வாலிபர் கைது