×

சார்பதிவாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னர் முடிக்க வேண்டும்: பதிவுத்துறை ஐஜி உத்தரவு

சென்னை: சார்பதிவாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை ஓய்வு பெறும் 3 மாதங்களுக்குள் முன்னர் முடிக்க வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி அனைத்து மண்டல டிஐஜிக்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. சில நேரங்களில் சார்பதிவாளர்கள் சொத்தின் மதிப்பை குறைத்து கட்டணம் நிர்ணயம் செய்வதாக தெரிகிறது. இதனால், அரசுக்கு மறைமுக இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்கள் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விசாரணை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். ஆனால், சார்பதிவாளர்கள் பலர் மீதான விசாரணை ஓய்வு பெறும் வரை நடக்கிறது. இதனால் அரசுக்கு நேரடி இழப்பு தொகையை சார்பதிவாளர்களிடம் வசூலிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.  இதே போன்று தற்போது வரை 110 சார்பதிவாளர்கள் மீதான விசாரணை முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலா அனைத்து மண்டல டிஐஜிக்களுக்கும் சுற்றறிக்ைக ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 2020-2021ம் நிதியாண்டில் வயது முதிர்வினால் ஓய்வு பெற உள்ள சார்பதிவாளர்கள் தொடர்பாக ஓழுங்கு நடவடிக்கை நிலுவை மற்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய இழப்பு ஏதும் இருப்பின் அவ்வினங்களை உடன் தீர்வு செய்திட சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்களுக்கு உரிய அறிவுரை வழங்கவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஓய்வு பெறவுள்ள அலுவலர்கள் தொடர்பான ஒழுங்கு நடவடிக்கைகள், நிலுவை வசூல் செய்தல் போன்ற அனைத்தையும் பணி ஓய்வு பெறும் நாளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே தீர்வு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெறும் சார்பதிவாளர்களை பொறுத்து இழப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குறித்த அறிக்கை அனுப்பும் போது சார்பதிவாளர்களின் பெயரை முதலெழுத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வரும் 2020-2021ம் நிதியாண்டில் 34 சார்பதிவாளர்கள் ஓய்வு பெறவுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஐஜி அறிக்கை கேட்டிருப்பது பதிவுத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : dependents ,retirement ,IG ,Dependents Against Disciplinary Action , Disciplinary ,dependents,retirement,Department IG ,directive
× RELATED மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு