×

திறந்த நிலை பல்கலையில் சிறப்பு பிஎட் படிப்பு அறிமுகம்

சென்னை: இந்திய மறுவாழ்வு கழகம், பல்கலைக் கழக மானியக் குழு ஆகியவற்றின் அங்கீகாரத்துடன் சிறப்பு கல்வி திட்டம் ஒன்றை தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.இந்த புதிய கல்வி திட்டத்தின் கீழ் பிஎட் பட்டப் படிப்பு நடத்தப்படும். இதற்கான விண்ணப்பங்கள் திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சேர்ந்து படிக்க விரும்புவோர் நவம்பர் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த பிஎட் பட்டப்படிப்பு பிஎட்(பொது)பட்டத்துக்கு இணையானது என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2 படிப்புக்கு பிறகு இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவம், விளக்க குறிப்பு கையேடு ஆகியவை தொடர்பாக  www.tnou.ac.in என்ற இணைய தளத்தில் காணலாம்.


Tags : Introduction ,University Introduction , open-ended, university, Special ,Ph.D.
× RELATED பெண்களின் உடல்நலத்திற்காக...