×

ஆந்திர தலைமை செயலாளர் அதிரடி மாற்றம்

திருமலை: ஆந்திர தேர்தலின்போது, ஐஏஎஸ் அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு தேர்தலில் வெற்றிபெற்ற ஜெகன்மோகன் அரசில் எல்.வி.சுப்பிரமணியம் தொடர்ந்து தலைமை செயலாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் திடீரென எல்.வி.சுப்பிரமணியம் பணியிட மாற்றம் செய்யப்பட்டு மனித வள மேம்பாட்டு இன்ஸ்ட்டியூட்  டைரக்டர் ஜெனரலாக நியமித்து முதல்வரின் தனி செயலர் பிரவின் பிரகாஷ் உத்தரவிட்டார். முதல்வர் ஜெகன்மோகனின் நெருங்கிய நண்பரும் நம்பகமானவராக செயல்பட்டு வந்த சுப்பிரமணியம் இன்னும் 5 மாதத்தில் ஓய்வு பெறவுள்ள நிலையில் அவர் மாற்றப்பட்டுள்ளார்.Tags : AP ,Chief Secretary Action Change , AP Chief Secretary, Action Change
× RELATED நெதர்லாந்திலிருந்து போதை மாத்திரைகள்...