×

குஜராத் தீவிரவாத சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி

அகமதாபாத்: கடந்த 2004ல் குஜராத் முதல்வராக பிரதமர் மோடி இருந்த போது,  ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், 3 முறை அனுப்பியும் இம்மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து, கடந்த 2015ல் குஜராத் அரசு இம்மசோதாவின் பெயரை குஜராத் தீவிரவாத தடுப்பு மற்றும் ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு என மாற்றி மீண்டும் தாக்கல் செய்து நிறைவேற்றியது.
இச்சட்டத்தின்படி, ஒட்டு கேட்கப்படும் தொலைபேசி உரையாடலைக் கூட சட்டப்பூர்வ ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியும். இதனால், இம்மசோதா மீது கடும் சர்ச்சை எழுந்தன. இந்நிலையில், இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் பிரதீப்சின் ஜடேஜா நேற்று தெரிவித்தார்.

Tags : President ,Gujarat , President endorses, Gujarat's radical law
× RELATED காங். தலைவர் பதவிக்கு டிஜிட்டல் முறையில் தேர்தல்