லோக் ஜனசக்தி தலைவராக சிராக் பாஸ்வான் தேர்வு : தேசிய செயற்குழுவில் முடிவு

புதுடெல்லி: லோக் ஜனசக்தி கட்சியின் தலைவராக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானை கட்சியின் தேசிய செயற்குழு தேர்ந்தெடுத்துள்ளது. லோக் ஜனசக்தி கட்சியின் தலைவராக இருப்பவர் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான். இந்த கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவராக ராம்விலாஸ் பாஸ்வானின் மகனும் எம்பி.யுமான சிராக் பாஸ்வான் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராம்விலாஸ் பாஸ்வான் ெசய்தியாளர்களிடம் கூறுகையில் `‘லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய செயற்குழுவில் கட்சியின் புதிய தலைவராக சிராக் பாஸ்வானை ஒருமனதாக தேர்வு செய்துள்ளோம்,’’ என்றார். சிராக் பாஸ்வான், 2வது முறையாக மக்களவை எம்பி.யாக தேர்வு பெற்றவர் என்பதுடன் கட்சியில் கொள்கை முடிவுகளை எடுப்பதில் தந்தைக்கு உறுதுணையாக இருந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories:

>