எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்

ஜம்மு:  ஜம்மு காஷ்மீரில் ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீரின் ஹிராநகரில் மன்யாரிசோர்காலி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த எல்லைப் பாதுகாப்பு படையினர் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்தனர்.

நேற்று காலையும் பாகிஸ்தான் ராணுவம் தனது தாக்குதலை தொட ர்ந்தது. பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் காலை 7.40 மணிக்கு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. சிறிய ரக ஆயுதங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.

Related Stories:

>