×

அண்ணா பல்கலை.க்கு இன்ஸ்டிட்யூட் ஆப் எமினெஸ்ஸ் அந்தஸ்து : ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியப் பல்கலைக்கழகங்களை இடம் பிடிக்க வைக்கும் நோக்கத்துடன், 10 அரசு பல்கலைக்கழகங்கள், 10 தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 20 பல்கலைக்கழகங்களுக்கு உயர்புகழ் தகுதி (இன்ஸ்டிட்யூட் ஆப் எமினெஸ்ஸ்)வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்தது. இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் ஒன்றாகும். இதற்காக கட்டமைப்பு வசதிகளை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்த 2,750 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்ட நிலையில், அதில் 1000 கோடியை மத்திய அரசு வழங்கும் என்றும், மீதமுள்ள 1,750 கோடியை அடுத்த 5 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு நிபந்தனை விதித்தது. இந்த சிறப்பு அந்தஸ்தால் 69 சதவீத இடஒதுக்கீடு ரத்தாகும் என்று சர்ச்சை எழுப்பினர்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அதற்காக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 5 ஆண்டுகளில் 1,750 கோடி வழங்குவதற்கான உத்தரவாதத்தை ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு அளிக்க வேண்டும் என்று கெடு விதித்திருந்தது. அதன்படி ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் தமிழக அரசு அதன் முடிவை மத்திய அரசுக்கு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அதன்பின் இரு மாதங்களாகியும் அரசு இந்த விஷயத்தில் முடிவு எடுக்கவில்லை. இது அண்ணா பல்கலை. உயர்புகழ் தகுதி பெறுவதில் பின்னடைவை ஏற்படுத்தி விடும். உயர்கல்வித்துறைக்கு தமிழக அரசு நடப்பாண்டில் 4,584 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதில் 100 கோடி அண்ணா பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த செலவிடப்படவுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும். இந்த விஷயத்தில் தமிழக அரசு விரைந்து முடிவெடுத்து வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


Tags : Anna University Institute of Eminence Status ,Ramadas , Anna University, Institute of Eminence Status, Ramadas emphasis
× RELATED குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளியை...