×

பாய்லர் இயக்க லைசென்ஸ் பெற லஞ்சம் பெறுவதாக புகார் கொதிகலன் இயக்கக அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள் கூண்டோடு மாற்றம்

* முதல்வர் தனிப்பிரிவு அலுவலக உத்தரவை தொடர்ந்து நடவடிக்கை

சென்னை: பாய்லர் இயக்க வருடாந்திர லைசென்ஸ் பெற லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து கொதிகலன் இயக்கக அலுவலகத்தில் பணிபுரிந்த வந்த ஊழியர்கள் அனைவரும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக பொதுப்பணித்துறையின் கீழ் இயங்கும் கொதிகலன் இயக்ககம் மூலம் தமிழகத்தில் உள்ள கம்பெனிகள் கொதிகலன்கள் பராமரிப்பு மற்றும் பாய்லர் இயக்க வருடாந்திர லைசென்ஸ் மற்றும் பற்றவைப்பாளர் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த லைசென்ஸ் தர 25 ஆயிரம் வரையும், பாய்லர் வெளிமாநிலத்தில் இருந்து வாங்கி அதனை பெயர் மாற்றம் செய்ய 30 ஆயிரம் என வாங்கப்படுகிறது. மேலும், வெளிமாநிலத்தில் இருந்து பாய்லர் சான்றிதழ் பெற 40 ஆயிரம் வரை லஞ்சம் பெறப்படுகிறது. இது தொடர்பாக நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றது. ஆனால், அந்த புகார் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க முதல்வரின் தனிப்பிரிவு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, கொதிகலன்  இயக்ககத்தில் பணியாற்றி வந்தவர்களை கூண்டோடு மாற்றம் செய்து முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி கொதிகலன் இயக்கக கண்காணிப்பாளர் முருகானந்தம் பார்க்டவுண் பொதுப்பணித்துறை மின்கோட்டம், பதிவுரு உதவியாளர் பாலசுப்ரமணியன் திருவள்ளூர் கட்டுமான பிரிவு கோட்டம், உதவியாளர் சுப்பிரமணியன் மாநில திட்ட மேலாண்மை அலுவலக கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பது துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : boiler operating office ,boiler operator , boiler operator's office, complaining of bribery ,boiler operating license
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...