3 ஆண்டுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் எஸ்ஐக்களை டிரான்ஸ்பர் செய்ய வேண்டும் : உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சுற்றறிக்கை

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 3 ஆண்டுகளுக்கு மேல் நடைபெறாமல் உள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் விசாரணையில் உள்ளன. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதன்படி வாக்காளர்கள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

மேலும், மூன்று ஆண்டுகளுக்கு மேல்  ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது. அதைதொடர்ந்து தமிழக டிஜிபி திரிபாதி நேற்று அனைத்து காவல் துறை ஐஜிக்கள், டிஐஜிக்கள், அனைத்து மாநகர கமிஷனர்கள் மற்றும் அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார். அதில், தமிழக காவல் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர்கள் வரும் 15ம் தேதிக்குள் பணியிடமாற்றம் செய்யப்பட வேண்டும். மேலும், செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் நிறைவு செய்த உதவி ஆய்வாளர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>