×

மருத்துவ ஆய்வாளர், இளநிலை பகுப்பாய்வாளர் பதவி ரிசல்ட் டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு மருத்துவ   பணி  மற்றும் மருத்துவ  சார்நிலை பணிகளுக்கு மருத்துவ ஆய்வாளர்  மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர்   பதவியில் (2017-2019ம் ஆண்டுக்கான) காலியாக உள்ள 49 பணியிடத்தை நிரப்புவதற்கான தேர்வை கடந்த ஜூன் 23ம் தேதி நடத்தியது. இதில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக 102 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதே போல் 2018-2019ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொதுப்பணிகளுக்கு சென்னை, சமுக நீதி மற்றும் மனித உரிமை, கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர்  அலுவலகத்திற்கான சமூகவியலாளர் மற்றும் பொருளாதார வல்லுநர் பதவிக்காக நடத்தப்பட்ட தேர்வில் 6 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.


Tags : Analyst , Clinical Analyst, Junior Analyst , Result TNPSC Information
× RELATED தஞ்சாவூர் அருகே வடுகக்குடி வாழை...