×

நீட் பயிற்சியில் நடந்த மோசடி 2 மாதத்தில் விசாரணை முடியும் : ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: நீட் பயிற்சியில் நடந்த மோசடி குறித்த விசாரணை 2 மாதத்தில் முடியும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூரைச் சேர்ந்த பரசுராமன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளிப்பதற்காக தமிழகம் முழுவதும் 412 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த மையங்களில் அரசு சார்பில் ஒரு ஆசிரியர், கணினி உள்ளிட்ட பொருட்கள் வசதியும் அரசு பணத்தில் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

கடையநல்லூரில் அமைக்கப்பட்ட நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக ஆசிரியர்கள் பணியில் இருந்ததாக போலியாக கணக்கு கொடுத்து மோசடி நடந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், ‘‘புகார் குறித்த விசாரணை நடந்து வருகிறது. 2 மாதத்தில் விசாரணை முடியும். அதன்பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என ெதரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மனு மீதான விசாரணையை டிச. 4க்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : branch ,iCourt , NEET training ,investigated in 2 months, Government information ,highCourt branch
× RELATED குற்றால அருவிக்கு வரும்...