×

உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி : அன்புமணி தகவல்

தர்மபுரி: சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பின்னர் முடிவு செய்வோம். உள்ளாட்சித்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சந்திப்போம் என்று அன்புமணி கூறினார். தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் பாமக நிர்வாகிகளுடனான சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில், பாட்டாளி இளைஞர் சங்க தலைவர் அன்புமணி எம்.பி. கலந்து கொண்டு பேசுகையில், ‘உலக வெப்பமயமாதல் குறித்து ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்காமல் போனால், இன்னும் 30 ஆண்டுகளில் இந்தியாவும், பாதிப்படையும். அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வரும் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்போம். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் அப்போதைய வியூகத்தின் அடிப்படையில், கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்’ என்றார்.

Tags : Alliance ,AIADMK ,elections , Alliance with AIADMK ,local elections
× RELATED நான் செல்லும் இடங்களில் எல்லாம்...