×

கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்aட் உடலுக்கு பொது இடத்தில்தான் இறுதி நிகழ்ச்சி : ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நாமக்கல் மாவட்டம் கல்லக்காட்டுவலசு, குமாரபாளையத்தைச் சேர்ந்த அன்பரசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கேரள மாநிலம் அகழி வனப்பகுதியில் கடந்த 29ம் தேதி தண்டர்போல்ட் சிறப்பு படை ேபாலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் சகோதரி சந்திரா மற்றும் அவரது மனைவி கலா ஆகியோர் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் கைது ெசய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்க 30 நாள் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் தினேஷ்பாபு ஆஜராகி, ‘‘கொல்லப்பட்ட மணிவாசகத்தின் உடலை சொந்த ஊரான சேலம் கொண்டு செல்வது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘மணிவாசகத்தின் உடலை கேரளாவில் இருந்து சொந்த ஊரான சேலத்திற்கு ெகாண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும். மணிவாசகத்தின் இறுதி நிகழ்ச்சிகளை தனிப்பட்டோ, தனியார் நிலத்திலோ செய்யக் கூடாது. பொது மயானத்தில் தான் செய்ய வேண்டும். இதனால், எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாமல் போலீசார் பார்த்துக் கொள்ள வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

Tags : ceremony ,Maoist ,Kerala Funeral , Funeral , public place, Maoist body shot, Kerala
× RELATED பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா