×

ஓ.பன்னீர்செல்வம் தகவல் உள்ளாட்சி தேர்தல் தேதி 15 நாட்களில் அறிவிப்பு

நாங்குநேரி: உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி குறித்த அறிவிப்பு 15 நாட்களில் வெளியாகும் என்று நாங்குநேரியில் நடந்த வாக்காளர்கள் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி பெற்றார். இதையடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று நாங்குநேரியில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் வெற்றி பெற்றபோது அந்த தொகுதியை சொர்க்கப்பூமியாக மாற்றிக் காட்டுவேன், என்றார். அதேபோல் நாங்களும் நாங்குநேரி தொகுதியை சொர்க்க பூமியாக மாற்றிக் காட்டுவோம். தங்கம் உற்பத்தி செய்கிற நாட்டில்கூட தாலிக்கு தங்கம் கிடையாது. ஆனால் இந்த அரசு தாலிக்குதங்கம் வழங்கி வருகிறது. அரசின் வருவாயில் 45 சதவீதம் நிதியை சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக செலவழித்து வருகிறோம். எனவே இடைத்தேர்தலில் மட்டுமல்ல, அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலிலும் வாக்காளர்கள் எங்களுக்கு துணை நிற்க வேண்டும். இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளிவரும். டிசம்பரில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் எங்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.  இந்த வெற்றி தொடர வேண்டுமென விரும்புகிறோம். இந்த தொகுதிக்கு நாங்கள் செய்யப் போகும் சாதனைகள், திட்டங்கள் மூலம் எங்களது நன்றியை சொல்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : election , O. Pannirselvam,15 days notice , local election date
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...