×

டெல்லியில் 10 மணி நேரம் நடைபெற்ற போலீசார் போராட்டம் முடிவுக்கு வந்தது

டெல்லி: டெல்லியின் திஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்தும் விவகாரத்தில் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு டெல்லி போலீசார் இன்று காலை 9:30 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போலீசார் போராட்டத்தை முடித்து கொண்டுள்ளதாக அறிவித்துள்ளனர். வழக்கறிஞர்களுடனான மோதலில் காயமடைந்த காவலர்கள் குடும்பத்திற்கு ரூ.25,000 வழங்கப்படும்; ’காவலர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்’; காவலர்களை தாக்கிய வழக்கறிஞர்களுக்கு எதிராக எப்ஐஆர். பதிவு; வழக்கறிஞர்கள் தாக்கியது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றும் டெல்லி சிறப்பு ஆணையர் கிருஷ்ணய்யா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Tags : police protest ,Delhi , The 10-hour police protest in Delhi ended
× RELATED டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி லக்னோ வந்தடைந்தார்