சென்னை ஆளுநர் மாளிகை, கிண்டி சிறுவர் பூங்கா, ஐஐடி போன்ற இடங்களில் 497 புள்ளிமான்கள் இறந்துள்ளன: வனத்துறை தகவல்

சென்னை: சென்னை ஆளுநர் மாளிகை, கிண்டி சிறுவர் பூங்கா, ஐஐடி போன்ற இடங்களில் 5 ஆண்டுகளில் 497 புள்ளிமான்கள் இறந்துள்ளன என வனத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள மான்களை வேறு இடத்துக்கு மாற்ற வனத்துறைக்கு தடை விதிக்குமாறு முரளிதரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கில் பதிலளித்த வனத்துறை பிளாஸ்டிக் சாப்பிட்டது, நாய்கள் கடித்தது போன்ற காரணங்களால்  497 புள்ளிமான்கள் இறந்ததாக விளக்கம் அளித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி, ஆளுநர் மாளிகை ஆகிய இடங்களை விட்டு மான்கள் வெளியேறும் போது மான்கள் இறக்கின்றன என வனத்துறை தெரிவித்துள்ளது.

Tags : Governor ,House ,Chennai ,Kindi Children's Park ,IIT: Forest Department 497 ,IIT: Forest Department , Chennai Governor's House, Kindi Children's Park, IIT, 497 figures, Died, Forest Department
× RELATED சென்னை ஆளுநர் மாளிகையில் நேதாஜியின்...