புதுச்சேரி ocean spray ஓட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரி ocean spray ஓட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ocean spray ஓட்டல் சசிகலாவின் பினாமி சொத்து என தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவின் பினாமி பெயரில் இருந்த ரூ.1,500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. ocean spray ஓட்டலையும் முடக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் ocean spray முக்கியமான ஓட்டலாக உள்ளது. ocean spray புதுச்சேரி லட்சுமி ஜூவல்லர்ஸ் நிர்வாகத்தில் உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள மஞ்சக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரி லட்சுமி ஜுவல்லரி உரிமையாளர் நவீன் பாலாஜி என்பவருக்கு சொந்தமான சுமார் 24 ஏக்கர் பரப்பளவுள்ள தனியார் சொகுசு விடுதி உள்ளது. இந்த சொகுசு விடுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த சொகுசு விடுதியில் சிறையில் உள்ள சசிகலாவிற்கும் பங்குள்ளது என்று கூறுகின்றனர். மேலும் இரண்டு வருடத்திற்கு முன்பு இந்த சொகுசு விடுதியில் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் சசிகலாவின் ரூ.1500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்நிலையில் இந்த சொகுசு விடுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் 6 இடங்களில் இந்த வருமான வரித்துறை சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ocean spray  ஓட்டலில் வருமான வரித்துறை சோதனையானது நடந்து வருகிறது.

Related Stories:

>