சென்னை அருகே துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் உயிரிழப்பு: காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

சென்னை: சென்னை தாம்பரத்தை அடுத்த வேங்கடமங்கலத்தில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் உயிரிழந்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை அருகே பாலிடெக்னிக் மாணவர் மீது மற்றொரு மாணவர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடிய சூழ்நிலையில் சம்பவ இடத்தில் காவல் கண்காணிப்பாளர் ஆய்வினை மேற்கொண்டுள்ளார். வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்த முகேஷ்(19). இவர் அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய நண்பர் விஜய். இவர் ஜூமோடோ உணவு சப்ளை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். விஜய்யும் முகேஷும் ஒரே அறையில் பேசிக்கொண்டிருக்கையில் அங்கிருந்து துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது.

இதனையடுத்து விஜய் மட்டும் துப்பாக்கி போன்ற ஒரு பொருளை மறைத்த எடுத்து சென்றுள்ளார். அருகில் உள்ளவர்கள் பிறகு அறைக்குள் சென்று பார்க்கும் பொழுது ரத்தவெள்ளத்தில் முகேஷ் இருந்துள்ளார். அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பிறகு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர். முகேஷிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்  துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் உயிரிழந்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர்களுக்கு துப்பாக்கி எங்கிருந்து வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் 25 போலீஸ் அதிகாரிகள் சம்பவம் நடந்த வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய விஜய் மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்திய துப்பாக்கி குறித்தும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். துப்பாக்கி சூடு நடத்திய விஜய் ஆயுத தடுப்பு பிரிவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. மேலும் விஜய்க்கு சட்டவிரோத கும்பல்களுடன் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories:

>