×

அமெரிக்கப் படையால் கொல்லப்பட்ட ஐஎஸ் தலைவர் அல் பாக்தாதி சகோதரி துருக்கி அதிகாரிகளால் பிடிப்பு

அமெரிக்கப் படையால் கொல்லப்பட்ட ஐஎஸ் தலைவர் அல் பாக்தாதி சகோதரி துருக்கி அதிகாரிகளால் பிடிப்பு

பக்தாதி: அமெரிக்கப் படையால் கொல்லப்பட்ட ஐஎஸ் தலைவர் அல் பாக்தாதியின் சகோதரியை துருக்கி அதிகாரிகள் பிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அலெப்போ மாகாணத்தில் உள்ள அசாஸ் நகரில் ஐஎஸ் மேலும் ரஸ்மியா சிரியாவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்ததாகவும், ரஸ்மியாவுக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலக நாடுகள் பலவற்றில் நிகழ்ந்த நாச வேலைகளுக்குக் காரணமாக இருந்த ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார். ஈராக்கைச் சேர்ந்த அபுபக்கர் அல் பக்தாதியின் வயது 48 ஆகும்.

சிரியா நாட்டின் வடமேற்குப் பகுதியில் இட்லிப் என்ற இடத்தில் அல் பாக்தாதி பதுங்கியிருப்பதாக அமெரிக்கப் படைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் மறைந்திருந்த கட்டிடத்துக்குள் அதிரடியாகப் புகுந்த அமெரிக்கப் படையினர் தாக்குதல் நடத்தினர். அமெரிக்கப் படையினருடன் கொண்டு செல்லப்பட்ட நாய்களால் துரத்தப்பட்ட அல் பாக்தாதி, ஒரு குகை போன்ற சுரங்கத்துக்குள் புகுந்தார். அங்கிருந்து வெளியேற வழி இல்லாத நிலையில் தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து பக்தாதி இறந்த செய்தியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : US ,sister ,Turkish ,troops ,IS ,Al Baghdadi , அமெரிக்கப் படையால் கொல்லப்பட்ட ஐஎஸ் தலைவர் அல் பாக்தாதி சகோதரி துருக்கி அதிகாரிகளால் பிடிப்பு
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...