×

திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம் குறித்து மு.க ஸ்டாலின் க.அன்பழகனுடன் ஆலோசனை

சென்னை: தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகனுடன் கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அன்பழகன் அவரது இல்லத்தில் சந்தித்து நவம்பர் 10ல் நடைபெற உள்ள திமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஸ்டாலின் ஆலோசித்தார். திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம் குறித்தும் முக ஸ்டாலின் பொதுச்செயலாளருடன் ஆலோசித்துள்ளார். இதனை தொடர்ந்து க.அன்பழகனின் உடல்நலம் குறித்து ஸ்டாலின், துரைமுருகன், அ.ராசா, பொன்முடி விசாரித்தனர்.


Tags : DMK Stalin ,DMK General Committee DMK Stalin , DMK General Committee, Resolution, MK Stalin
× RELATED மழைப்பொழிவை பொறுத்து செம்பரம்பாக்கம்...