×

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து சவரன் ரூ.29,552-க்கும் விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.3,694-க்கும் ஒரு சவரன் ரூ.29,552-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50.30 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வார நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 அதிகரித்திதது தங்கம் ஒரு கிராம் ரூ.3,673-க்கும், ஒரு சவரன் ரூ.29,384-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

கடந்த மாதத்தில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்தது. அதன்படி, ஒரு சவரன் 22 கேரட் தங்க நகை இன்று ரூ.29,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.3,653-க்கு விற்பனையாகிறது. அதே போல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,816ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.30,528 ஆகவும் உள்ளது. வெள்ளியின் கிராமுக்கு ரூ.49.70 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.49,700 ஆகவும் உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வந்தது.

இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது.

இதனிடையே அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் இந்த மாதத்தில் தங்கம் விலை அவ்வப்போது அதிகரித்தும் சரிந்தும் நிலவி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலையில் காணப்படும் ஏற்ற, இறக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக அதை வாங்குவதில் தேக்கநிலை தொடரும் என கூறப்படுகிறது.


Tags : Rs , price,jewelery ,gold decreased, Rs.56
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு