×

சீர்காழி பகுதியில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்: சிகிச்சையளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறல்

சீர்காழி: சீர்காழி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் வருவதால் சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர் திணறி வருகின்றனர். சீர்காழியில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து 1500க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதேபோல் 200க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த நிலையில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் விஷக்காய்ச்சல் போன்ற பல்வேறு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவமனைக்கு அதிகளவில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சில நோயாளிகள் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனைக்கு காலையில் நோயாளிகள் அதிகளவில் வரும்போது மருத்துவர்கள் அதிகளவில் இருந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் மதியம் இரவு நேரங்களில் காய்ச்சல் மற்றும் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு டாக்டர் மட்டுமே இருந்து வருகிறார். அவரால் குறைவாக சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகிறார். இதனால் நோயால் பாதிக்கப்பட்டு வரும் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.

குறிப்பாக குழந்தைகள் முதல் பள்ளி செல்லும் மாணவ மாணவியரை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. நேற்று மதியம் மருத்துவமனையில் ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் இருந்ததால் சிகிச்சைக்கு வந்த பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக இரவு நேரங்களில் திடீரென உடல்நலம் பாதிக்கப்படும், விபத்துக்களில் சிக்கி வருபவர்களுக்கு ஒரு மருத்துவரால் உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லைய. இரவு நேரங்களில் உள்நோயாளியாக இருப்பவர்களுக்கும் ஒரு மருத்துவர் மட்டும் சிகிச்சை அளிக்க வேண்டும்.

திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு வருவோருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால் எப்படி முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு ஒரு மருத்துவரால் உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் உடல்நலம் பாதிப்பு அதிகமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாமல் வெளியூர் மருத்துவமனையை நாடி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் மாணவ, மாணவிகள் நலன் கருதி மதியம் இரவு நேரங்களில் கூடுதல் மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Doctors , Mysterious fever
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை