×

சிலி மற்றும் டோங்கா நாடுகளில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம்: பொதுமக்கள் பதற்றம்

நியூயார்க்: சிலி மற்றும் டோங்கா நாடுகளில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் பதற்றமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இல்லபெல் நகரில் இருந்து 28 கிலோ மீட்டர் தென்மேற்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பதற்றமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.  

நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. இதேபோல் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா நாட்டிலும் நேற்று இரவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நியாபு நகரின் மேற்கு-வடமேற்கு திசையில் 131 கிலோ மீட்டரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகாக பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியது குறிப்பிடத்தக்கது.


Tags : Earthquake ,Chile ,Tonga , Earthquake, Chile,Tonga ,last night,Public tension
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்