×

ராணுவ பெண் போலீஸ் படைக்கு 8 கர்நாடக பெண்கள் தேர்வு

பெங்களூரு: ராணுவ பெண் போலீஸ் படைக்கு கர்நாடகாவை சேர்ந்த 8 பெண்கள் தேர்வாகியுள்ளனர். இந்திய ராணுவத்தில் பல பிரிவுகள் உள்ளன. அதில் ராணுவ போலீஸ் படை நூறாண்டுக்கும் மேலாக இயங்கி வருகிறது. ஆனால் பெண் ராணுவ போலீஸ் படை இதுவரை இல்லை. பாஜ ஆட்சியில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் (தற்போதைய நிதியமைச்சர்) ராணுவ பெண் போலீஸ் படை அமைக்க உத்தரவு பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து ஆள் சேர்ப்பதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. நாடு முழுவதும் 8.5 லட்சம் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு, மருத்துவ பரிசோதனைகள் நடத்தி முடிக்கப்பட்டு இறுதியாக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் மாநிலத்தின் ஹுப்பள்ளி-தார்வார் மாவட்டம், தார்வார் தாலுகா, மடிகொப்பா என்ற குக்கிராமத்தில் விவசாய கூலி தொழில் செய்துவரும் மகாதேவப்பா-நீலவ்வா தம்பதியரின் மகள் பீமக்கா மகாதேவப்பா சவுஹான் என்ற மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூன்றாமாண்டு பி.காம் படித்து வரும் பீமக்கா மாநிலத்தில் இருந்து ராணுவ பெண் போலீஸ் படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணாக அறிவிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து மேலும் 8 பெண்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : women ,Army ,Karnataka ,police force , Military Woman Police, Karnataka, Women Select
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...