×

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்; ஒருவர் பலி

காஷ்மீர்: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஹரிசிங் தெரு மார்க்கெட்டில் நேற்று பிற்பகல் 1.30 மணி அளவில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் பலியானர். 13 பேர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் இருவரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் நடந்துள்ள 2வது கையெறி குண்டு தாக்குதல் சம்பவம் இது. இதற்கு முன் கடந்த மாதம் 12ம் தேதி நடந்த கையெறி குண்டு வீச்சில் 5 பேர் காயமடைந்தனர்.


Tags : Kashmir , Kashmir, terrorist attack, one killed
× RELATED ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து...