ரஜினிக்கு கமல் வாழ்த்து

சென்னை: வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.கோவாவில்  நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது ரஜினிகாந்த்துக்கு  வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து பல்வேறு தரப்பினர்,  திரையுலகினர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  இந்நிலையில் போபாலில்  இந்தியன் 2 படப்பிடிப்பில் இருந்த கமல்ஹாசன், தொலைபேசியில் ரஜினியை  தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். அதற்கு ரஜினிகாந்த் நன்றி கூறினார்.  கடந்த ஆண்டு கோவா சர்வதேச பட விழாவில் அமிதாப்பச்சன் இந்த விருது பெற்றிருந்தார்.

Tags : Kamal ,Rajini Rajini , Kamal, Rajini
× RELATED தமிழக மக்களின் நலனுக்காக நாங்கள்...