×

வருமானத்துக்கு மேல் சொத்து குவிப்பு நெல்லை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி, மனைவிக்கு சிறை

நெல்லை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து ேசர்த்த வழக்கில் நெல்லை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளருக்கு 4 ஆண்டும், அவரது மனைவிக்கு 3 ஆண்டும் சிறை தண்டனை விதித்து நெல்லை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தை சேர்ந்தவர் குமாரவேல். இவர் நெல்லை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளராக உள்ளார். இவரது மனைவி தில்லை உமா சாந்தி (47). குமாரவேல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து ேசர்த்துள்ளதாக நெல்லை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து டிஎஸ்பி மெக்லரின் எஸ்கால், எஸ்எஸ்ஐ மாரியப்பன் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் குமாரவேல், அவரது மனைவி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ₹7 லட்சத்து 70 ஆயிரத்து 938 மதிப்புள்ள சொத்து வாங்கியது தெரியவந்தது.
இதையடுத்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கடந்த 2008 டிசம்பர் 17ம் தேதி நெல்லை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி பத்மா விசாரித்து, குமாரவேலுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும்,  50 ஆயிரம் அபராதமும், அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

Tags : Pollution Control Board officer , Pollution Control Board officer
× RELATED சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,...