மாஜி அமைச்சரை நீக்கிவிட்டு கன்னியாகுமரி கிழக்கில் அமமுக பொறுப்புக் குழு அமைப்பு: டிடிவி.தினகரன் அறிவிப்பு

சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அமமுகவில் கட்சி பணிகளை மேற்கொள்வதற்காக கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் மாணிக்கராஜா தலைமையில் இன்று முதல் பொறுப்புக்குழு அமைக்கப்படுகிறது. இக்குழுவில், லெட்சுமணன், ஹிமாம் பாதுஷா, ஜி.செல்வம், வி.நவமணி, செந்தில்முருகன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். மேலும் அமமுக அமைப்புச் செயலாளர் மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருக்கும் பச்சைமால், எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் பொறுப்பிலிருக்கும் நாஞ்சில் முருகேசன் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்கள். புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொறுப்புக்குழு நிர்வாகிகளுக்கு கட்சியினர் முழு ஒத்துழைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories:

More
>