×

ஏடிஎம்மில் மயங்கி விழுந்து முதியவர் பலி

பெரம்பூர்: கொளத்தூர் ராமதாஸ் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (82). இவர் கொளத்தூர் பாலாஜி நகர் மெயின் ரோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க நேற்று பகல் 12 மணியளவில் வந்துள்ளார். அப்போது, திடீரென தலைச்சுற்றி கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர், வரும் வழியில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.



Tags : ATM, Falling faint,old man ,kills
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...