சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த கோரமண்டல் எக்ஸ்பிரசில் 24 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் பிடிபட்டனர்

சென்னை: சென்ட்ரல் ரயில்நிலையம் வந்த ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரசில் 24 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உத்தரபிரதேசம், ஒடிசா, ஆந்திரா வழியாக தினசரி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இயக்கப்படுகிறது. அதன்படி, நேற்று மாலை 5 மணிக்கு சென்ட்ரல் ரயில்நிலையத்தில் உள்ள 8வது நடைமேடைக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அதிலிருந்து பயணிகள் இறங்கி சென்று கொண்டிருந்தனர்.

அங்கு, ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரயிலில் வந்து இறங்கிய 2 நபர்கள், சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தினர். இதனால், ரயில்வே போலீசார் அவர்களை அழைத்து விசாரணை செய்தனர். அப்போது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். தீவிர விசாரணையில், அவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜாகீர் (32), அப்சர் அலி (32) என்பதும், ரயிலில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 24 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Tags : Central Railway Station ,Coromandel Express , Arrived , Central, Railway Station,caught
× RELATED கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது